விக்ரம் படத்தை பார்த்து விட்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பாராட்டியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது.
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.
இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. 30வது நாளைக் கடந்தும் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது.
விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
இந்நிலையில், விக்ரம் படத்தினை பார்த்து விட்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் பாராட்டி விமர்சனம் செய்துள்ளார். அதில், " எனக்கு ஏஜெண்ட் டீனா, உப்பிலியப்பன், ஏஜெண்ட் விக்ரம் பாத்திரங்கள் பிடித்திருந்தது. சந்தானம் கதாபாத்திரம் மிகவும் பெரியது. மார்வெல் தானோஸூக்கு இணையானது. ரொம்ப நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சந்தானம் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. ரோலக்ஸ் பாத்திரம் கிக் ஆஸ். ஏஜென்ட் விக்ரமின் கடைசி காட்சி புத்துணர்வு கொடுத்தது. அமர் கதாபாத்திரம் ஏஜெண்ட் விக்ரம் எழுதிய நுணுக்கமான கதையை புரிந்து கொள்ள உதவியது. பிரபஞ்சன் கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டது. ஜோஸ் கதாபாத்திரம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. படக்குழுவினருக்கு அன்பும் பாராட்டும்" என அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Also Read | சரவணன் நடிக்கும் "The Legend".. கேரள வினியோக உரிமையை கைப்பற்றிய 'பீஸ்ட்' வினியோகஸ்தர்!