அல்போன்ஸ் புத்ரன் 2013ஆம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் மலையாள ரசிகர்களின் விருப்பமான இயக்குனரானார்.
2 வருடங்கள் கழித்து வெளியான பிரேமம் (2015) தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவர் திரையுலகில் நுழைந்து 8 வருடங்களே ஆன நிலையிலும் அவர் இரண்டு படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலேயே பரவலான சினிமா ரசிகர்களின் விருப்ப இயக்குனராக உள்ளார்.
வலிமை படத்தில் நடித்துள்ள பிரபல சீரியல் நடிகை! டிரெய்லர்ல இதை கவனிச்சீங்களா?
பிரேமம்
அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் பகிர்ந்துள்ள இந்த முகநூல் பதிவு தற்போது ரஜினி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோல்ட்
அந்த முகநூல் பதிவில் அல்போன்ஸ் புத்திரன் இவ்வாறு கூறுகிறார் "2015-ல் பிரேமம் ரிலீஸுக்குப் பிறகு, ஒரு பட இயக்குனராக நான் ரஜினிகாந்துடன் ஒரு படம் செய்ய விரும்பினேன். 99 சதவீத இயக்குனர்கள் இவரை வைத்து படம் பண்ண விரும்புவார்கள். ரஜினிகாந்த் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்க விரும்பவில்லை என்று ஒரு நாள் ஆன்லைன் பக்கத்தில் ஒரு கட்டுரை வந்தது.
அந்தச் செய்தி எங்கும் பரவியது. இந்தப் பதிவு குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் என்னிடம் மெசேஜ் அனுப்பியிருந்தார். பிரேமம் ரிலீஸுக்குப் பிறகு நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்று பதிலளித்தேன். அதை புரிந்து கொண்டு ரஜினி சாரிடம் இது குறித்து பேசினார். அப்போதுதான் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
வலிமை படத்தின் Trailer- ல இது இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்! ரசிகர்கள் ஏக்கம்!
ரஜினிகாந்த்
இப்போது 2021 ஆகஸ்டில் GOLD படத்தின் கதையை ஒரு குணச்சித்திர நடிகரிடம் சொல்லும்போது, அவர் என்னிடம் சொல்கிறார்.. அவர் ஒரு இயக்குனரிடம் பேசும் போது, அந்த இயக்குனர் ரஜினிகாந்த் உடன் படம் செய்ய விரும்பவில்லை என்று குணச்சித்திர நடிகரிடம் கூறியுள்ளார் .. நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அதை காட்டவில்லை.
1000 கோடி வசூல்
2015ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இந்தப் போலிச் செய்தி என்னைத் தொந்தரவு செய்வதாக உணர்கிறேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், ரஜினிகாந்த் சாருடன் நான் இயக்கும் படம் நான் விரும்பியபடி நடந்திருந்தால், பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும், மேலும் அரசுக்கு வரியும் அதிகம் கிடைத்திருக்கும். நஷ்டம் எனக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், பார்வையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும்தான்.
அந்தக் கட்டுரையைப் போட்டவரும், இந்தப் பொய்ச் செய்திக்குப் பின்னால் இருந்த மூளையும் ஒரு நாள் என் கண்முன் தோன்றுவார்கள். நீங்கள் நாளுக்காக காத்திருங்கள்.
ரஜினி சாருடன் என் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் நீங்கள் எப்போதும் போல எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.