Reliable Software
www.garudavega.com

"மாஸ் வரவேற்பை பெற்ற அல்லு அர்ஜூன் - ரஷ்மிகா பட ஃபர்ஸ்ட் லுக்".. படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக இந்திய படமான புஷ்பாவின் ஃபர்ஸ்ட் லுக் 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

Allu Arjun Rashmika Pushpa movie coming as 2 parts

அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர்,  இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று தற்போது அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படத்திற்காக முதல் முறையாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தண்ணா கைகோர்த்துள்ளார். இயக்குநர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் மீண்டும் அல்லு அர்ஜுன் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மிச்சம் உள்ளன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. எடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர், "நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம். இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தனர்.

Allu Arjun Rashmika Pushpa movie coming as 2 parts

ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து புஷ்பா படம் பேசுகிறது. இந்த அகில இந்திய அளவில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

ALSO READ: சிம்புவின் 'மஹா' படம் ஓடிடி-யிலா? கோர்ட் வரை சென்ற இயக்குநர்!.. என்ன தான் பிரச்சனை?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Rashmika Pushpa movie coming as 2 parts

People looking for online information on Allu Arjun, Pushpa, Rashmika Mandanna will find this news story useful.