www.garudavega.com

புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செம அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு   டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது.

Allu Arjun Pushpa The Rule Movie Audition at Thirupati New Balaji Colony

Also Read | துபாயில் கமல்ஹாசனை கொஞ்சிய சிறுவன்.. ஆண்டவர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ! முழு தகவல்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Allu Arjun Pushpa The Rule Movie Audition at Thirupati New Balaji Colony

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

Allu Arjun Pushpa The Rule Movie Audition at Thirupati New Balaji Colony

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை வெளியிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Allu Arjun Pushpa The Rule Movie Audition at Thirupati New Balaji Colony

ஜூலை 3,4,5 தேதிகளில் திருப்பதியில் இதற்கான ஆடிசன் மேக் மை பேபி ஜீனியஸ் பள்ளியில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆடிசன் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபெறுவோர் கட்டாயம் சித்தூர் வட்டார தெலுங்கு மொழி பேச தெரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Also Read | PCOS பாதிப்புக்குள்ளான ஸ்ருதிஹாசன்.. நோயில் இருந்து மீள கடும் பயிற்சி! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Pushpa The Rule Movie Audition at Thirupati New Balaji Colony

People looking for online information on Allu Arjun, Balaji Colony, Pushpa movie, Pushpa Movie Audition at Thirupati will find this news story useful.