www.garudavega.com

புஷ்பா - னா FIRE UH! வெளிவந்த இரண்டு மாதத்திலேயே மிகப்பெரிய சாதனை படைத்த புஷ்பா! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: புஷ்பா படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது.

Allu Arjun pushpa Movie Songs Hit billion views

பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' கடந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு   டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Allu Arjun pushpa Movie Songs Hit billion views

 

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. பொங்கி எழுந்த ஷகிலா.. "சிம்பு பேர எதுக்கு யூஸ் பண்றீங்க??

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Allu Arjun pushpa Movie Songs Hit billion views

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

பாலா தயாரித்த படத்தின் பாடலுக்கு மயங்கிய A.R. ரஹ்மான்! அவரே போட்ட வைரல் பதிவு!

 

Allu Arjun pushpa Movie Songs Hit billion views

ஹிந்தியில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 90 கோடி ரூபாயை வசூல் செய்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியில் மேலும் ஒரு மணிமகுடமாக இந்த படத்தின் பாடல் வீடியோக்கள் படம் வெளியான சில தினங்களுக்குள் 100 பில்லியன் பாவனையாளர்களை கடந்து உள்ளது. இதனை ஆதித்யா மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் விளம்பரம் மூலம் அறிவித்துள்ளது.

Allu Arjun pushpa Movie Songs Hit billion views

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun pushpa Movie Songs Hit billion views

People looking for online information on Allu Arjun, அல்லு அர்ஜுன், புஷ்பா, ராஷ்மிகா மந்தனா, Pushpa movie, Pushpa Movie Songs, Pushpa Movie Songs Hit 100 billion views will find this news story useful.