நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும் பிரபல இயக்குநருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் மூன்று, கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இவர் இயக்குநராக பிரபலமானவர். தொடர்ந்து பல ஆல்பம் மேக்கிங் மற்றும் திரைப்பட பணிகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு மனமொத்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அறிவித்திருந்தனர். இந்த தம்பதியருக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னதாக யாத்ரா , தனுஷ் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்புக்கு நடுவே சென்று அவரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இதேபோல் அண்மையில் தனுஷ் நடித்த தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்பட ஷோவில் தனுஷ் தன் மகன்களுடன் அமர்ந்திருந்த புகைப்படம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் மகன்களை பாசத்துடன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு கட்டிக்கொண்டுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அத்துடன் ஒரு கேப்சனையு பதிவிட்டுள்ளார். அந்த கேப்சனில், “Sometimes ….all you need is just their HUG” என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த கேப்சனும் இந்த புகைப்படங்களுமே தற்போது சோசியல் மீடியாவில் வெகுவேகமாக பரவி வருகின்றன.