சீரியல்களில் நடிக்கும் நாயகிகள் பலருக்கும் பின்னால் ஒருப்பவர்கள் குரல் கலைஞர்கள் எனும் டப்பிங் கலைஞர்கள் தான்.
சீரியல்களில் நடிக்கும் நாயகிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மேனரிசமும், குரல்களில் வேறுபாடுகளும் வித்தியாசங்களும் அவர்களுக்கே உரிய ஒரு வித்தியாசமான பேச்சு விதமும் இருக்கும். அப்படி உருவாக்கப்பட்ட கேரக்டர்கள் நம் மனதில் பதிவதற்கு அவர்களின் மொழி காரணமாக அமைகிறது. எனினும் பல சீரியல் நடிகைகள், நாயகிகள் பல்வேறு மொழிகளில் நடிப்பதாலும் நேரமின்மை காரணமாகவும் அவர்களால் சொந்த குரலில் பேச இயலாத சூழல் பல நேரங்களில் ஏற்படும்.
அதுபோன்ற சூழல்களில் தான் குரல் கலைஞர்கள் பின்னணி குரல்களை கொடுத்து வருவதுண்டு. அந்த வகையில் பின்னணி குரல் கலைஞர் Akshayaprabha ரோஜா, சத்யா, ஹிட்லர், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களின் நடிகைகளுக்கு ஒரே வசனத்தை பேசி காட்டுகிறார். கண்களை மூடிக்கொண்டு இந்த குரல்களை கேட்கும்போதே சம்மந்தப்பட்ட அந்த கேரக்டர்களையும் அந்த கேரக்டர்களில் நடிக்கும் நாயகிகளையும் நம்மால் உணர முடிகிறது. அவர் பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.