பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமார். சமீபத்தில் அக்ஷய் தன்னுடைய மனைவி டுவிங்கிள் கண்ணாவுடன் தங்களுடைய 20-வது திருமண நாளை கொண்டாடினர். இவர்களுக்கு ஆரவ் என்னும் மகனும் நிதாரா என்னும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் அக்ஷயின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் தன்னுடைய முதல் காதல் குறித்து அக்ஷய், '' நான் அப்போது ரொம்ப கூச்சப்படுவேன். நான் அவரின் தோள் மீது கை போட்டது இல்லை. அவர் கையை பிடித்தது இல்லை. நான் அவர் கையை பிடிக்க வேண்டும், முத்தமிட வேண்டும் என்று அவர் விரும்பினார். நான் அதுபோல எதுவும் செய்யவில்லை. இதையடுத்து அவர் என்னை விட்டு விலகிச் சென்று விட்டார்,'' என தெரிவித்து இருக்கிறார்.
அக்ஷய் நடிப்பில் அத்ராங்கி ரே, பச்சன் பாண்டே ஆகிய படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. இவரின் நடிப்பில் அடுத்ததாக சூரியவன்ஷி படம் வெளியாக உள்ளது.