www.garudavega.com

"WORST.. இவ கோவத்தால அரை நாள் WASTE!".. அக்‌ஷரா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஹவுஸ்மேட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நடந்த பள்ளி காலங்களை நினைவுபடுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்க், முடிந்த பின், இந்த டாஸ்க்கில், வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார் என்பது குறித்து ஹவுஸ்மேட்ஸ் லிவிங் ஏரியாவில், பிக்பாஸ் முன்னிலையில் பேசிக்கொண்டிருந்தனர்.

akshara worst performer in school task biggbosstamil5

அதில், பலரும் அக்‌ஷராவை பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். முன்னதாக பள்ளி காலங்களை நினைவுபடுத்தும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் சிபி ஒரு கண்டிப்பான வார்டனாக வலம் வந்தார். இதில் போர்டிங் ஸ்கூல் ஸ்டூடண்ட்டாக வலம் வந்த அக்‌ஷராவுக்கு சிபி நிறைய கட்டுப்பாடுகளை விதித்தார். 

akshara worst performer in school task biggbosstamil5

அதன் நிமித்தமாக அக்‌ஷராவை தடுத்து ராஜூவிடம் திருக்குறளை கற்கச்சொல்லி 5 திருக்குறளை மனப்பாடமாக சொல்லச்சொல்லி வற்புறுத்தினார். ராஜூவும் அவ்வாறே கூற, கடுப்பான அக்‌ஷரா, பூ ஜாடியை தூக்கிவீசிவிட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று அமர்ந்து கத்தத் தொடங்கிவிட்டார்.

akshara worst performer in school task biggbosstamil5

அப்போது, “அனைவரும் ஓவராக பண்றீங்க.. எப்படி திருக்குறள் மனப்பாடம் பண்ண முடியும்? சில விஷயங்கள் வராதுனா வராது. டைம் ஆகும். ரொம்ப பண்றீங்க. டாஸ்க்னா ஒரு அளவுதான்!” என அக்‌ஷரா பேசினார்.

akshara worst performer in school task biggbosstamil5

அதன் பின்னரும் கோபமாக வலம்வந்த அக்‌ஷராவை பிக்பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பேசினார். அப்போது பிக்பாஸ் என்ன சொன்னார் என்பது காட்டப்படவில்லை என்றாலும், அதன் பின்னும் அக்‌ஷரா சிறிது நேரம் அழுதுகொண்டே இருந்தார்.

akshara worst performer in school task biggbosstamil5

இந்நிலையில், வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார் என்பது குறித்து ஹவுஸ்மேட்ஸ் லிவிங் ஏரியாவில், பிக்பாஸ் முன்னிலையில் சொல்லும்போது, நிரூப், பாவனி,அமீர், பிரியங்கா,சிபி அனைவருமே, “அக்‌ஷரா ஸ்டூடன்ட்டாக,  சுட்டித்தனமா இருந்திருக்கணும். ஆனால் பிக்பாஸ் போட்டியாளர் போலவே, கோவப்பட்டார். இவளால் ஒரு அரைநாள் வேஸ்ட் ஆகிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ நெகடிவிட்டியை கொண்டுவந்துவிட்டாள்!” என்று பேசினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Akshara worst performer in school task biggbosstamil5

People looking for online information on Akshara, Akshara ciby fight, Akshara Reddy, BiggBossTamil5, Ciby, Niroop, Priyanka will find this news story useful.