விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வீட்டுக்குள் கிட்டத்தட்ட 78 நாட்கள் ஹவுஸ் மேட்ஸாக வாழ்ந்தேவிட்டனர் என்று சொல்லலாம்.
முதலில் 18 போட்டியாளர்களுடன் இணைந்த இந்த பிக்பாஸ் வீட்டில், பின்னர் நமீதா மாரிமுத்துவை தவிர்த்து நாடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அண்ணாச்சி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதன் பின்னர், அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். இவர்களுக்கு முன்னரே வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அபிஷேக் பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார்.
இன்னும் கொஞ்ச நாளில் பிக்பாஸ் முடிவுக்கு வந்துவிடும். அப்படி இருந்தாலும் கூட வீட்டை பிரிந்த நியாபகம் அனைவரிடத்திலும் அதிகமாகவே இருக்கிறது. தற்போது கிட்டத்தட்ட 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர். என்ன தான் இத்தனை நாட்கள் அனைவரும் ஒன்றாய் உண்டு, உறங்கி, சிரித்து, சண்டையிட்டு, புரிந்து இருந்தாலும், இத்தனை நாட்களை கடந்து விட்டாலும் கூட, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கு ஹவுஸ்மேட்ஸ் பெற்றோர்கள், உறவினர்கள், உற்றார்கள், நண்பர்கள் என அனைவரையும் மறந்து விடுவார்கள் என்று கணக்குப் போட முடியவில்லை.
ஆம், சில வேளைகளில் போட்டியாளர்களுக்கு அனைவரும் நினைவுக்கு வருவர். போட்டியாளர்கள் சக போட்டியாளருடன் சண்டை போடும்போதும், தனிமையாக உணரும் போதும் என பல்வேறு விதங்களிலும் அவர்களுக்கு வீட்டு நினைவு வருவது தவிர்க்க முடியாதது. இதனிடையே மிக கஷ்டமான டாஸ்குகளை போட்டியாளர்கள் கடந்து வந்துவிட்டனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில், பிக்பாஸ் ஃப்ரீஸ் என சொன்னால், அப்படியே அசைவின்றி இருக்க கூடிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டாஸ்க்கில்தான், ஒரு நெருக்கடியான நிலைக்கு அக்ஷரா தள்ளப்பட்டார். கண்டிப்பாக பிக்பாஸ் இதை பார்த்து ரசித்திருக்க வேண்டும். அவர் இதை அக்ஷராவுக்கு ஜாலியான ஒரு சர்ப்ரைஸாகவே கொடுத்திருக்கக் கூடும். பிக்பாஸ் ஃப்ரீஸ் என்று சொன்னதுமே, அக்ஷரா அப்படியே உறைந்துவிட, அக்ஷராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அவரை யாரோ அழைக்க ஒரு கணம் யோசித்த அக்ஷரா, இது தன் அம்மாவின் குரல் என்பது நினைவுக்கு வந்து உடனடியாக பரவசமாகி விட்டார். “ஏய்.. இது என் அம்மா” என்று கத்திகொண்டே, “என் அம்மாவின் குரல் கேட்டுது.. அவர் இங்கு வந்திருக்கிறார்” என்று சொல்லி, பிக்பாஸ் வாசலுக்கு வந்தே விட்டார் அக்ஷரா.
அப்போது அக்ஷராவின் அண்ணன் மற்றும் அம்மா இருவரும் அந்த கதவு திறக்கப்பட்டதும், வீட்டுக்குள்ளே வருகின்றனர். உட்னெ இருவரையும் துள்ளிக் குதித்தபடியும் அழுதபடியும் கட்டிப்பிடித்துக்கொண்டு அக்ஷரா தன்னுடைய மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் வெளிப்படுத்தினார்.