நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.
Also Read | Siva Sivaayam : சிவ பக்தராக செல்வராகவன் உருகி பாடும் பகாசூரன் படத்தின் முதல் பாடல் Trending!
அதன்படி, வலிமை படத்துக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத் சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். இந்த படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், இதற்காக படக்குழு விரைவில் பேங்காக் நகருக்கு விமானம் மூலம் புறப்படுவதாக தெரிகிறது. இதனிடையேதான், இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அத்துடன் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அஜித், முகத்தில் தாடியுடன் காதில் கடுக்கண் அணிந்தபடி, கைகளில் துப்பாக்கியுடன் இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார், இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் விஜய் வேலுக்குட்டி ஏற்கனவே வலிமை படத்தின் எடிட்டராக பணிபுரிந்தவர். ஜிப்ரான் ஏற்கனவே எச். வினோத்துடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணிபுரிந்தவர். மேலும் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் எடிட்டராகவும் பணிபுரிகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த ரெஃப்ரன்ஸ் வீரம் படத்தில் இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர். அதாவது வீரம் படத்தில் நடிகர் அஜித், ‘துணிவே துணை’ என்று எழுதப்பட்ட ஜிப்ஸியில் வலம் வருவார். அதில் இருக்கும் துணிவு எனும் வார்த்தையை குறிப்பிட்டு வீரம் படத்தில் AK61 படத்தின் டைட்டில் ரெப்ஃரன்ஸ் அமைந்துள்ளது சர்ப்ரைஸாக இருப்பதாக குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
Also Read | Senthamaraiye : என்னா ரொமான்ஸ்.!!. பிக்பாஸ் அமீர் & பாவனி முதல்முறை சேர்ந்து நடித்த ஆல்பம்..!!