சென்னை, 16, பிப்ரவரி 2022: நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து வரும் பிரபல திரைப்படம் 'வலிமை'.
படக்குழுவினர்
இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.
ரிலீஸ், சென்சார் விபரங்கள்
போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ள வலிமை திரைப்படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
அண்மையில் இந்த படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகளை சென்னை ஃபோர் பிரேம்ஸில் மேற்கொள்ளும் போது, தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் எம்.ஆர். ராஜாகிருஷ்ணன், நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் எச்.வினோத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி படுவைரலானது.
இதே அஜித் - வினோத் - எம்.ஆர். ராஜாகிருஷ்ணன் கூட்டணி, முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்திலும் இணைந்திருந்ததை தொடர்ந்து மீண்டும் வலிமை படத்துக்காக இணைந்தது, ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த மற்றுமொரு காரணமாய் அமைந்துள்ளது.
இதனிடையே வலிமை மோடுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் வேளையில் எச்.வினோத், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் அடுத்து வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வலிமை FDFS
இந்நிலையில் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் அதிகாலை 4 மணி ஷோ வலிமை திரைப்படக்கு இருக்கிறது.
அண்மையில் முறையான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.