அஜித் நடிக்கும் AK61 படத்தில் பிரபல இளம் நடிகை இணைந்துள்ளார்.
Also Read | “கடவுளெனும் முதலாளி..” பாட்டு பாடிகிட்டு அமெரிக்காவில் விவசாயம்… வைரலாகும் நெப்போலியன் video
நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.
வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார்.
AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்குகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மெர்சி சித்ரா நடிக்கிறார். கலைஞர் டிவி செய்திகள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர். இவர் அஜித்துடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு " இது ஒரு பொன்னான வாய்ப்பு. அஜித் சாருடன் நடித்தது, சந்தித்தது, இனிமையான அனுபவம். அஜித் பண்பாளர் மற்றும் இனிமையானவர். அவர் என்னை மெர்சி என ஞாபகம் வைத்தது அருமையான தருணம். இயக்குனர் வினோத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
Also Read | ‘வானம் யாவும்’… O2 படத்தின் செகண்ட் சிங்கிள்… திருமணத்துக்கு பின் நயன்தாராவின் முதல் ரிலீஸ்