www.garudavega.com

"ஆசான் அஜித்குமார்".. AK-க்கு ஆசிரியர் தின வாழ்த்து சொன்ன பிரபல AK61 பட நடிகர்! வைரல் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் குறித்து ஏகே 61 பட நடிகரின் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

AK 61 Actor John Kokken wished Ajith Kumar AK for teachers day

Also Read | ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகான் நடிக்கும் "விக்ரம் வேதா".. TRAILER ரிலீஸ் எப்போ? புது போஸ்டர்!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

AK 61 Actor John Kokken wished Ajith Kumar AK for teachers day

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

இந்த சென்னை படப்பிடிப்பு  காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. 

AK 61 Actor John Kokken wished Ajith Kumar AK for teachers day

இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார்.  இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு  விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது.

விசாகப்பட்டினம் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் அஜித் தனது சக பைக் ரைடர்களுடன் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

AK 61 Actor John Kokken wished Ajith Kumar AK for teachers day

இந்நிலையில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு AK61 நடிகர் ஜான் கொக்கன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பில்லாவில் உங்களை முதன்முதலாகப் பார்த்து, தென்னிந்தியத் திரையுலகில் நான் நுழைந்தபோது ரசிகனானதிலிருந்து முதல் முறையாக உங்களுடன் வீரம் படத்தில் பணிபுரிந்து, மீண்டும் #ak61 இல் உங்களுடன் பணியாற்றுவது வரை நீண்ட பயணம். இந்த வாழ்நாளில் உங்களைச் சந்திக்கவும், உங்களை அறிந்து கொள்ளவும், உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவும் எனக்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் எப்போதும் உங்களை நேசிக்கிறேன் அஜித்குமார் சார் ❤️❤️. முதல் முறையாக என்னை எப்போதும் உங்கள் பணிவுடன் மற்றும் புன்னகையுடன் வரவேற்றதற்கு நன்றி 😃, நான் யாரென்று தெரியாத போதும் நீங்கள் எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றி 🙏, நான் திரையுலகில் புதியவராக இருந்தபோதும், எதற்கும்  இல்லாத போதும் என்னை வழி நடத்தியதற்கு நன்றி, எனக்கு மிகவும் தேவைப்படும்போது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி 😍, உங்கள் கடின உழைப்பு 💪 மற்றும் கருணையால் எப்போதும் என்னை ஊக்குவித்ததற்கு நன்றி ❤️, ஒருபோதும் கைவிடக்கூடாது என்று எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி 💪, நீங்கள் அஜித் சார் 😍 என்பதற்கு நன்றி. என் வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள் ஆனால் உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட சிறந்த வாழ்க்கை பாடங்கள் சார். உங்கள் கருணைக்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் மற்றும் உங்களை என்றென்றும் நேசிப்பேன் ❤️❤️❤️. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்". என ஜான் கொக்கன் தனது பதிவில் கூறியுள்ளார்.

 

Also Read | பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயராம் கதாபாத்திரம் இதுவா? செம்ம கேரக்டர் லுக் போஸ்டர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Actor John Kokken wished Ajith Kumar AK for teachers day

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK, AK 61, John Kokken will find this news story useful.