நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
Also Read | பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "வணங்கான் பட செட்டில்".. மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி!
சில நாட்களுக்கு முன் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நேற்று நடிகர் அஜித், உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் & பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அஜித் இந்தியா முழுவதும் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அஜித்தை இமயமலையில் சந்தித்தது தொடர்பாக ஒரு பதிவை மஞ்சு காஷ்யப்பா என்பவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " நான் ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கும், முதன்முறையாக எனது பைக் பயணத்தில் எனக்கு டயர் காற்று குறைந்துவிட்டது, நான் உதவிக்காக யாரையாவது தேடிக்கொண்டிருந்தேன், அப்போது ஒரு bmw 1250GSA (எனது கனவு பைக்) கடந்து சென்றது. நான் அவரை நோக்கி கை அசைத்தேன்.
அவரிடம் ஏர் கம்ப்ரஸரைக் கேட்டேன், அது காரில் இருப்பதாக கூறினார் அவர். கார் 10 நிமிடம் பின்னால் வந்து கொண்டிருந்தது, நான் அவருடன் பைக்கைப் பற்றி கொஞ்சம் பேசினேன், அவர் எங்களிடம் உங்கள் பெயர் என்ன, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அவர் அவரை அறிமுகப்படுத்தினார் ஹாய் நான் அஜித்! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். பிறகு சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித்தே இறங்கி என் வண்டியை சரி செய்ய உதவினார், இரண்டு மணி நேரம் அவருடன் பைக் ரைடு செய்தேன். நான் அவரிடம் மீண்டும் ஒரு உதவி கேட்டேன், சார் உங்களுடன் ஒரு தேநீர் அருந்துவது ஒரு பாக்கியம் என்று அவரிடம் அதற்காக அனுமதி கேட்டேன். அவர் தனது வண்டியை நிறுத்தினார். அடுத்த டீக்கடையில் 10நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி எங்களுடன் டீக்கடையில் உரையாடி எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
நான் முழுக்கதையையும் பதிவிட்டதற்குக் காரணம் இரண்டே விஷயங்கள் தான்.
1. ஒரு லெஜண்ட் ஆக இருக்கும் ஒரு மனிதன், கொஞ்சம் கூட ஆட்டிடியூட் இல்லாமல் இருக்கிறார் மற்றும் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டுள்ளார்.
2. நான் அதிர்ஷ்டசாலி, இந்த நாளை என்னால் முழுமையாக மறக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.
Also Read | தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மீனா.. வைரலாகும் சூப்பர் வீடியோ!