ஐதராபாத்: ப்ளாக் பஸ்டர் ஆன அஜித் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி ஆல்டைம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘வேதாளம்’. 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அஜித் உடன், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்து இருந்தார். வேதாளம் திரைப்படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் சுமார் 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இருந்தது. தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
ராம பிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இந்த படம் “போலா சங்கர்” என பெயரிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவி மற்றும் மெஹர் ரமேஷ் முதன்முறையாக இணைந்துள்ள இந்த மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி காலை 7:45 மணிக்கு நடைபெற்றது.
இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கியது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோணா பரவலால் நிறுத்தப்பட்டது. இச்சூழலில் கீர்த்தி சுரேஷ் கொரோணா தாக்கத்தில் இருந்து சமீபத்தில் குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்ள படப்பிடிப்பு முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அண்ணன்-தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தொடர்ந்து தமன்னா, மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார்.
கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அனில் சுங்கராவின் ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போலா ஷங்கர் 2022 இல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்: சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா
தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: மெஹர் ரமேஷ்
தயாரிப்பாளர்: ராமபிரம்மம் சுங்கரா
பேனர்: ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: மஹதி ஸ்வர சாகர்