ஆந்திரா - தெலுங்கானா: வலிமை படத்தின் தெலுங்கு பதிப்பு திரையரங்குகள் குறித்து மிரட்டலான தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
வலிமை படத்தின் தெலுங்கு பதிப்பு சில நாட்களுக்கு முன் சென்சாராகி உள்ளது. தமிழ் பதிப்பை விட தெலுங்கில் ஒரு நிமிடம் கூடுதல் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழில் நீக்கியது போல் தெலுங்கில் சில காட்சிகள் நீக்கப்படவில்லை. இதனால் தமிழை விட தெலுங்கில் படம் இன்னும் வீரியமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.
இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
வலிமை படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை டிவிட்டரில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும், ஜி ஸ்டூடியோசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வலிமை படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 750க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக வலிமை படத்தின் வினியோகஸ்தர் கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.
ராஜகிருஷ்ணன் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றியவர். ரங்கஸ்தலம் (2018) திரைப்படத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றவர்.
கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விருது, கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
வலிமை படத்தின் PROMO! அடுத்தடுத்து வெளியான மாஸ் - சென்டிமென்ட் காட்சிகள்