Reliable Software
www.garudavega.com

VIDEO: முதல் ஆளாக ஓட்டு போட்ட தல அஜித், ஷாலினி.. தந்தையுடன் வந்து வாக்களித்த சூர்யா, கார்த்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழக சட்டசபைக்கு இன்று காலை 7 மணி தொடங்கி ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தப்படுகிறது. 

Ajith Shalini Surya Karthi TN Elections 2021 Voting Videos

ஒருபுறம் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இன்னொருபுறம்  பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டு வருகின்றனர். இதில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் காலையிலேயே தங்கள் வாங்குக்களை பதிவு செய்தனர்.

Ajith Shalini Surya Karthi TN Elections 2021 Voting Videos

அவ்வகையில் நடிகர் அஜித்தும் அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி, திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தனர். எப்போதுமே தனக்கும் அரசியலுக்கும் உள்ள அதிகபட்ச ஜனநாயக தொடர்பே வாக்களிப்பதுதான் என கூறும் அஜித்குமார் எல்லா வாக்குப் பதிவு நாட்களிலும் மிக சீக்கிரமாகவே வந்து தமது ஜனநாயக கடமையை ஆற்றிவிடுவார்.

அப்படித்தான் இன்று காலை 7 மணிக்கே முதல் நபர்களாக திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்த அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் வாக்குப்பதிவு தொடங்கியதும் வந்தனர். அவர்கள் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் வருகை தந்தனர். அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்புடன் வழிகாட்டினர். மாஸ்க் அணிந்து வந்த இருவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை காண்பித்து வாக்குப்பதிவு செய்துவிட்டு மீண்டும் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவே புறப்பட்டு சென்றனர்.

Ajith Shalini Surya Karthi TN Elections 2021 Voting Videos

இதேபோல் சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். 

VIDEO: முதல் ஆளாக ஓட்டு போட்ட தல அஜித், ஷாலினி.. தந்தையுடன் வந்து வாக்களித்த சூர்யா, கார்த்தி! வீடியோ

VIDEO: முதல் ஆளாக ஓட்டு போட்ட தல அஜித், ஷாலினி.. தந்தையுடன் வந்து வாக்களித்த சூர்யா, கார்த்தி! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Shalini Surya Karthi TN Elections 2021 Voting Videos

People looking for online information on Ajith Kumar, Elections2021, Karthi, Shalini, Sivakumar, Surya, ThalaAjith, TN ASSEMBLY ELECTION, TNElections2021 will find this news story useful.