தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் இசையில் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூழலில் இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தல அஜித் தொடர்பான எந்த செய்தியும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும்.
அஜித், ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘அமர்க்களம்’. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2015ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகனும் பிறந்தார்கள்.
வலிமை படம் பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ஷாலினி மற்றும் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படம் ஒரு இனிமையான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டி தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், 2015 மார்ச் 2-ம் தேதி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பருவத்தில் அஜீத் போன்றே காட்சியளித்த ஆத்விக் தற்போது அப்படியே அம்மா ஷாலினி முக ஜாடையிலேயே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.