அஜித் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அரிதான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி கவனத்தைப் பெற்றுவருகிறது.
Also Read | “விருமாண்டி என் பேவரைட்… மதுரை background-ல கமல் சாரோட படம்…” எதிர்பார்ப்பை எகிறவைத்த பா.ரஞ்சித்!
அஜித் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அரிதான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி கவனத்தைப் பெற்றுவருகிறது.
பட்டங்களைத் துறந்த அஜித்
தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தமிழில் அமராவதி துவங்கி இதுவரையில் 60 படங்களில் நடித்துள்ள அஜித்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமா பயணத்தின் தொடக்க ஆண்டுகளில் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்தார் அஜித். அடிக்கடி ஊடகங்களையும் சந்தித்து பேட்டிக் கொடுத்து வந்தார். ஆனால் சமீபகாலமாக மிகவும் தனிமை விரும்பியாக இருக்கிறார்.
தல என்பது வேண்டாம்..
நடிகர் அஜித்துக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ரசிகர்மன்றங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் அவை அனைத்தையும் அவர் கலைப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அதுபோல ரசிகர்கள் அவரை அழைத்து வந்த ‘தல’ ஆகிய பட்டங்களை சொல்லி தன்னை அழைக்க வேண்டாம் எனவும் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் தன்னுடைய ரசிகர்கள் அவர்களின் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வதையே முதன்மையான பணியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
வைரல் ஆகும் பழைய வீடியோ…
ஆனாலும் அவ்வப்போது அவரைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கான விளக்கங்களையோ அல்லது தான் வெளியிடும் அறிக்கைகளையோ தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் கலந்துகொண்ட பழைய பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சந்திப்பில் அஜித் பேசிக் கொண்டு இருக்கும்போது தொடர்ந்து ஒரு நபரின் செல்போன் இரண்டு முறை ரிங் ஆக, அஜித் பொறுமையாக, “சார் தப்பா நெனைக்காதீங்க… கொஞ்சம் உங்க செல்போன ஆஃப் பண்ண முடியுமா” என சொல்லிவிட்டு தொடர்ந்து பேசுகிறார். அஜித்தின் இந்த கூலான ரியாக்ஷன் பற்றி புகழ்ந்து தற்போது அவரின் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ப்ரஸ் மீட்டில் அஜித் திருப்பதி பட நேரத்தின்போது இருந்த தோற்றத்தில் இருக்கிறார். அதனால் இந்த நிகழ்வு 2006-2007 ஆண்டுகளில் நடந்ததாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும் இந்த ப்ரஸ் மீட்டில் அஜித்தின் மனைவியான ஷாலினியும் கலந்துகொண்டுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8