சென்னை: வலிமை வில்லன் கார்த்திகேயா முதல் முதலாக Behindwoods சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார்.
'வலிமை' படத்தின் ஆந்திரா - தெலுங்கானா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.
படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. 'வலிமை' படத்தின் தமிழ் பதிப்பு சென்சாரகி, CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 24 அன்று இந்த படம் வெளியாக உள்ளது. வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது. 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக மதுரை பகுதிகளில் தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் வெளியாக உள்ளது.
வலிமை படத்திற்கு இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திகேயா படம் பற்றி பல அரிய தகவல்களையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் பகிர்ந்துள்ளார். அஜித் தந்த அறிவுரை, அஜித் உடனான நட்பு, எச். வினோத் உடன் வேலை பார்த்த அனுபவம், படப்பிடிப்பில் இருந்த சவால்கள், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார்.
அஜித் கார்த்திகேயாவுக்கு அளித்த பரிசு பற்றியும் கூறியுள்ளார். அதில், "வொர்க் அவுட் செய்ய, நான் எப்போதும் 4 கிலோ 5 கிலோ 7 கிலோ எடையுள்ள வெவ்வேறு டம்பல்களை எடுத்துச் செல்வேன்; அஜித் சார் ஒருமுறை நான் ஒரு கேஸில் இந்த டம்பல்களை எல்லாம் சுமந்து செல்வதை பார்த்தார்.
அஜித் சார் டம்புள்ஸ் வித்தியாசமான ஒன்று, நாம் அதை 4kg 5kg 7kg என சிங்கிள் டம்பில்ஸ் ஆக நெகிழ்வான வகையாக மாற்றலாம், ஒரு நாள் நான் அந்த டம்பிள்ஸை எல்லாம் ரசித்தேன், அதையே வாங்க வேண்டும் என்று மனதில் நினைத்தேன்.
மறுநாள் அஜீத் சாரின் உதவியாளர் என்னிடம் வந்து அந்த மாதிரியான டம்பிள்ஸைக் கொடுத்தார், அஜித் சார் இதை உங்களுக்காகப் பரிசளித்தார் என்று கூறினார், நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்". என கூறினார். மேலும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
AK61 படத்துல இது தான் அஜித் கெட்டப்! FIRST LOOK உடன் படக்குழு வெளியிட்ட முதல் அப்டேட்