RRR Others USA
www.garudavega.com

பட்டய கிளப்புது.. "வலிமை" பட பைக் ஸ்டண்ட்டால் மிரண்டு போன ஹாலிவுட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : வலிமை படத்தின் ட்ரெய்லரில் நடிகர் அஜித் ஹாலிவுட் நடிகர்  (George Clooney) போலவே இருக்கிறார் என ஒருவர் கூறியது வைரலாகி வருகிறது.

 

Ajith kumar Valimai trailer hits international journals

வலிமை படத்தின் டிரைலர் நேற்று மாலை 6:30 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 10 நிமிடத்திலேயே 1 மில்லியன் Views -களை கடந்தது. வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் முன்பு அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகளை படக்குழு முழுவீச்சில் துவங்கியுள்ளன.

Ajith kumar Valimai trailer hits international journals

விநியோகம்

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை காட்சி இயக்குனராக திலீப் சுப்பராயன் மற்றும் விஜய் வேலு குட்டி எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் தேதி அறிவிக்கப்படாத சூழலில் வலிமை படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. தென்மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் தற்போது வலிமைப் படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அனைத்து தியேட்டர்களிலும் வலிமை ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது.

Ajith kumar Valimai trailer hits international journals

நல்ல வரவேற்பு

வலிமை படத்தின் படக்குழு, படத்தின் போஸ்டர்களையும் முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் ப்ரோமோஷனனை ஆரம்பித்துள்ளனர். வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மோஷன் போஸ்டரை தொடர்ந்து வெளியான நாங்க வேற மாதிரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ ஏழு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. விசில் தீம் இசையும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Ajith kumar Valimai trailer hits international journals

வெளிநாட்டில் வரவேற்பு

இந்த நிலையில் நேற்று மாலை வெளியான ட்ரெய்லர், வெளிநாட்டிலும் பட்டய கிளப்பி வருகிறது. வலிமை ட்ரைலர் பற்றிய செய்தியை வெளிநாட்டு ஊடகங்களும் பதிவிடுகின்றனர். அந்த பதிவை பார்த்த Franklin megallan என்ற நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் " Wow இந்த  நடிகர் பெயர் என்ன? எங்கள் ஹாலிவுட் நடிகர்  "George Clooney"  மாதிரியே இருக்கிறார், படத்தின் சண்டைக்காட்சிகளும் அருமை" என்று பதிவிட்டுள்ளார். George Clooney, "The Midnight Sky,The Descendants, Gravity" போன்ற பல ஹாலிவுட் படங்களில்  நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவின் மூலம் ஹாலிவுட் வரை வலிமை படம் பிரபலமாகி வருகிறது என்று அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar Valimai trailer hits international journals

People looking for online information on Ajithvalimai, Valimai, Valimaitrailer, ValimaiUpdate will find this news story useful.