Jai been others
www.garudavega.com

தல அஜித்தின் வலிமை.. லேட்டஸ்ட் BTS புகைப்படங்கள்!.. கூட யார் இருக்காங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் H. வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது.

ajith kumar valimai shooting latest villain karthikeya

ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த திரைப்படமாக  'நேர்கொண்ட பார்வை' பெயர் பெற்றது.

பின்னர், நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை திரைப்படத்தில் இணைந்தது. எனினும் கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் போனது. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது. அதாவது, வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், Glimpse அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தின. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது.

அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவும் திட்டமிட்ட இந்த படப்பிடிப்பு (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அஜித் பங்குபெற்ற ரஷ்ய படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட BTS புகைப்படங்கள் தற்போது வைரலாகின்றன. அதில் பைக் சேசிங் சண்டைக்காட்சி முடிந்ததும், வலிமை இயக்குனர் H.வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இருக்கின்றனர். தல அஜித்துடன் வலிமை திரைப்படத்தின் வில்லன்  கார்த்திக்கேயாவும் இருக்கிறார் என்பதை இந்த புகைப்படங்களில் காண முடிகிறது.

ரசிகர்களால் தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வலிமை திரைப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு, பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar valimai shooting latest villain karthikeya

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Valimai, ValimaiUpdate, Yuvan Shankar Raja will find this news story useful.