இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
வலிமை படம் 200க்கும் மேற்ப்பட்ட திரைகளில் கேரளாவில் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
வலிமை படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 750க்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக வலிமை படத்தின் வினியோகஸ்தர் கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் வலிமை திரையரங்குகள் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரம் - 23
செங்கல்பட்டு - 99
கோவை - 96
சேலம் - 86
வடக்கு மற்றும் தெற்கு - 110
மதுரை ராம்நாடு- 103
தஞ்சை திருச்சி - 55
நெல்லை குமரி - 35 என மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. ஸ்கிரீன் எண்ணிக்கை இதற்கு மேலும் அதிகமாகலாம்.