Valimai BWE
www.garudavega.com

AJITH KUMAR, VALIMAI: "ட்ரிம் செய்யப்பட்ட வலிமை படத்தின் நீளம்" .. இப்போ DURATION எவ்வளவு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 25, பிப்ரவரி 2022: நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Ajith Kumar Valimai length trimmed new duration update

படக்குழுவினர்

இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.

வலிமை உருவானது எப்படி?

வலிமை பற்றி இயக்குநர் எச்.வினோத், நம்மிடையேயான பிரத்தியேக பேட்டி ஒன்றில், “வலிமை என்பது என்னிடம் முன்பே இருந்த கதை. அஜித் சாருக்கு என்று ஒரு படம் பண்ண நினைக்கும்போது நம்மிடமிருக்கும் கதைகளை நாம் தேடுவோம்ல? அப்படி ஒரு பைக் திருடனை பற்றிய கதை என்னிடம் இருந்தது. அந்த கதையில் வரும் ஆக்‌ஷன் உள்ளிட்ட விஷயங்களை இதில் சேர்த்துக்கொண்டேன்.

ஆனால் அது Basic கதை தான், 80% கதை புதுசா கிரியேட் பண்ணப்பட்ட கதை தான். தவிர நிறைய வெர்ஷன்களாக எழுதப்பட்ட கதை.. அதன் முதல் வெர்ஷன் அசிஸ்டன்களிடம் சொன்னப்போ எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. வலிமை படம் உருவானதற்கு இன்றைய இளைஞர்களின் நிலைமை தான் காரணம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் நீளம்..

முன்னதாக இந்த திரைப்படம், வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, 4 மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் CBFC சென்சாரில் படத்துக்கு U/A சான்றிதழ் என அறிவிக்கப்பட்டதுடன், வலிமை திரைப்படம் 179 (2:59) மணி நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி படமும் வெளியானது. நீண்ட நாட்கள் கழித்து  தமிழக திரையரங்குகளில் 100% இருக்கைகள் அனுமதிக்கப்பட்டதுடன், உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் வெளியாகி, அஜித் ரசிகர்களிடையே ஒரு பெரும் திருவிழா போல் மாறி களைகட்டியுள்ளது.

குறைக்கப்பட்ட படத்தின் கால அளவு

இந்நிலையில் வலிமை படத்தின் தமிழ் பதிப்பு நீளத்தின் முதல் பாதி 1 மணி நேரம் 30 நிமிடம் 48 வினாடிகளாகவும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 17 நிமிடம், 55 வினாடிகளாகவும் குறைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2 மணி நேரம் 59 நிமிடம், 4 வினாடிகள் என்றிருந்த கால அளவு, தற்போது 2 மணி நேரம் 48 நிமிடம் 44 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது முதற்பாதியில் 1 நிமிடம், 36 வினாடிகள், இரண்டாம் பாதியில் 8 நிமிடம் 45 வினாடிகள் என மொத்தமாக 10 நிமிடம், 21 வினாடிகளுக்கான காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

இதேபோல், வலிமை இந்தி பதிப்பிலும் 2 மணி நேரம் 59 நிமிடம், 5 வினாடிகள் என்றிருந்த கால அளவு  2 மணி நேரம் 41 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தி பதிப்பில் 13 நிமிடம் 28 வினாடிகளுக்கான காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Also Read: அதட்டிய தாமரை.. அடுத்த நொடியே நிரூப்க்கு அபி கொடுத்த Kiss.. அடுத்த முத்த சம்பவம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai length trimmed new duration update

People looking for online information on Ajith, Ajith Kumar, H Vinoth, Valimai, Valimai Duration, Valimai Movie Duration will find this news story useful.