நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான கேங்ஸ்டா எனும் கேங்ஸ்டர் பாடல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைப்பிலான இந்த பாடலை ஷபீர் சுல்தான் மற்றும் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளனர். ஷபீர் சுல்தான் பாடியுள்ளார். தற்போது ட்ரெண்ட் ஆகும் இந்த பாடலை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
When bad happens. Someone will rise from the ashes. Some call him a saviour, some call him #Gangstaa
The wait is over - A🔥K🔥 The original #Ganstaa is here!
▶️ - https://t.co/ovCYGeUhNu#Thunivu #AjithKumar #HVinoth
🎙️ @ShabirMusic
🖊️ @ShabirMusic & @Viveka_Lyrics pic.twitter.com/qA4jp7khS0
— Ghibran (@GhibranOfficial) December 25, 2022
நோ கட்ஸ், நோ க்ளோரி எனும் வார்த்தைகளுடன் தொடங்கும் இந்த பாடலின் தொடக்க வரிகளாக ‘சீண்டுனா சிரிப்பவன்..! சுயவழி நடப்பவன்..! சரித்திரம் படைப்பவன்..!’ ஆகிய வரிகள் அமைந்துள்ளன. இந்த படம் ஜிப்ரான் இசையமைக்கும் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | “90களில் எனக்கு போட்டியா ஒரு நடிகர் வந்தாரு..” - ‘வாரிசு’ விழாவில் மனம் திறந்த விஜய்.