RRR Others USA
www.garudavega.com

நீக்கப்பட்ட காட்சிகளுடன் 4K & DOLBY தரத்தில் பிரபல OTT-யில் வெளியாகும் வலிமை..! எப்போ...எத்தனை மணிக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களுக்கு வலிமை படக்குழு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது.

Ajith Kumar Starring Valimai Zee5 OTT Release with 4K and DOLBY

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள்.

Ajith Kumar Starring Valimai Zee5 OTT Release with 4K and DOLBY

எனினும் திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக திரைப்படத்தின் 12 நிமிடங்கள் வெட்டப்பட்டது. வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படம் நாளை மார்ச் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்தது. 

இந்நிலையில் வலிமை திரைப்படத்துடன் அத்திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் டெலிடட் காட்சிகளோடு நாளை ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதனை தொடர்ந்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் 4K , Dolby ஒலியமைப்பில் ஒடிடியில் வலிமை படம் வெளியாக உள்ளது.

Ajith Kumar Starring Valimai Zee5 OTT Release with 4K and DOLBY

வலிமை படத்தின் ஆடியோ 11:1 ஒலி கலவையில் அமைந்துள்ளது. தியேட்டர்களுக்கான ஒலிக்கலவையும் OTT-க்காக மாற்றப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை Zee5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வலிமை படத்தில் 2.66:1 என்ற விகிதத்தில் அதாவது 2.66 அகலம், 1 உயரம் என திரை இருக்கும். OTT- க்காக Aspect Ratio-வில் சில மாறுதல்களை படக்குழு செய்திருக்கலாம்.

Ajith Kumar Starring Valimai Zee5 OTT Release with 4K and DOLBY

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா முக்கிய தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Starring Valimai Zee5 OTT Release with 4K and DOLBY

People looking for online information on 4K, Ajith Kumar, AK, Dolby, H Vinoth, OTT, Valimai, Zee5 will find this news story useful.