www.garudavega.com

VIDEO: வலியில் இருந்து வலிமை! கிழிந்து போன ரைடிங் கியர்... பலத்த காயங்கள்.. அஜித் டாக்டர் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் (24.02.2022) அன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Ajith Kumar Personal Doctor about Ak's Injuries and Accidents

தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை  தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Ajith Kumar Personal Doctor about Ak's Injuries and Accidents

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக BMS-ல் வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Ajith Kumar Personal Doctor about Ak's Injuries and Accidents

வலிமைக்கு அடுத்து நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Ajith Kumar Personal Doctor about Ak's Injuries and Accidents

இந்நிலையில் நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேகமாக அஜித்தின் தனிப்பட்ட மருத்துவர் பேட்டி அளித்துள்ளார். அதில் ஆரம்பம், வேதாளம் படங்களின் போது ஏற்பட்ட காயங்கள், இதுவரை அஜித் செய்த அறுவை சிகிச்சைகள், முழங்கால் காயங்கள், தண்டு வட காயங்கள் ஆகியவற்றில்  இருந்து அஜித் எப்படி தண்ணம்பிக்கையுடன் குணமானார் என விவரித்துள்ளார். மேலும் வலிமை படம் பார்த்த அனுபவங்களையும், அஜித் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் குறித்தும் பேசியுள்ளார். 

குறிப்பாக விபத்து முதலுதவி, மருத்துவ காப்பீடு, அவசர சிகிச்சை முறைகள், பைக் சாகசங்களை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி பேசியுளார். முழு பேட்டியின் வீடியோ இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

VIDEO: வலியில் இருந்து வலிமை! கிழிந்து போன ரைடிங் கியர்... பலத்த காயங்கள்.. அஜித் டாக்டர் பேட்டி வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Personal Doctor about Ak's Injuries and Accidents

People looking for online information on Ajith Kumar, Arrambam, Bike Race, Cinema Shooting, Valimai, Vedalam will find this news story useful.