நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
Also Read | "ஒரு சுவாரஸ்யமான பயணம் 'Start' ஆயிடுச்சு..." விருமன் மேடையில் சூர்யா சொவ்லும் 'Secret'
சென்னையில் நடிகர் அஜித்குமார் சென்னைக்கு அருகில் உள்ள மொரை வீரபுரம் போலீஸ் பயிற்சி மைய அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்டார். அங்குள்ள காவலர்களிடம் அஜித் உரையாடும் வீடியோ அப்போது வெளியாகி வைரலானது.
அதன் பின்னர் மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ராணுவ ரிசர்வ் கேம்பஸில் (26.07.2022) அன்று துவங்கியது.
இதற்காக நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார். காலையில் போட்டிகள் முடிந்ததும் நடிகர் அஜித் குமார் செனனை திரும்பிவிட்டார்.
அந்த போடடிகளில் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் நண்பரும் சக பைக் டிராவலருமான சுப்ரஜ் வெங்கட் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்குமார் கையில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கிறார். உடன் சுப்ரஜ் வெங்கட் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
AK 61
நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதேவேளையில் தமிழகத்தில் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.
சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
Also Read |AK 61-ல் இணைந்த தேசிய விருது வென்ற ஸ்டண்ட் இயக்குனர்.. போட்டோவுடன் வெளிவந்த சூப்பர் தகவல்!