www.garudavega.com

AK 61: பேர் வைப்பதற்கு முன்பே.. உலகின் முன்னணி நிறுவனத்துக்கு விற்க்கப்பட்ட மிக முக்கிய உரிமம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை:  அஜித் - போனிகபூர் - எச். வினோத் மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது. 

Ajith Kumar AK61 audio rights acquired by Sony Music

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

Ajith Kumar AK61 audio rights acquired by Sony Music

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar AK61 audio rights acquired by Sony Music

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

AK 61படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

சமீபத்தில் அஜித் கேரளா சென்ற புகைப்படங்களும், ஐதராபாத் சென்ற புகைப்படங்களும் வெளிவந்தன. நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுத்த ரசிகர்கள் இதனை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். 

Ajith Kumar AK61 audio rights acquired by Sony Music

இந்நிலையில் AK 61 படத்தின் ஆடியோ உரிமையை உலகின் மிகப்பெரிய இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம் வலிமை, விவேகம், வேதாளம், என்னை அறிந்தால் போன்ற சமீபத்திய படங்களின் உரிமையும் சோனி நிறுவனமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK61 audio rights acquired by Sony Music

People looking for online information on AK 61, AK61, H Vinoth, Valimai will find this news story useful.