www.garudavega.com

முதல் இந்திய திரைப்படமாக துணிவு.. TIMES சதுக்கத்தில் தெறிக்கவிடும் PROMOTION நிகழ்ச்சிகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Ajith Kumar AK Thunivu Promotions on Newyork Times Square Nasdaq

வரும் 2023 பொங்கலுக்கு (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ajith Kumar AK Thunivu Promotions on Newyork Times Square Nasdaq

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ajith Kumar AK Thunivu Promotions on Newyork Times Square Nasdaq

இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள நாஸ்டாக் கட்டிடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒன்று டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தின் வீடியோ காட்சிகள் நாஸ்டாக் கட்டிடத்தில் திரையிடப்படும் என்றும் அப்போது செல்ஃபி எடுத்து அனுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுக்கு துணிவு படத்தின் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Thunivu Promotions on Newyork Times Square Nasdaq

People looking for online information on Ajith Kumar, Nasdaq, Newyork, Thunivu, Times Square will find this news story useful.