நடிகர் அஜித்குமாரின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read | பொங்கலுக்கு ரிலீஸாகும் 'துணிவு'.. H .வினோத் போட்டோவுடன் வெளிவந்த லேட்டஸ்ட் டபுள் அப்டேட்!
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு 'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார், புதிய லுக்கில் இருக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
துணிவு படத்தின் லுக்கான நீண்ட தாடியுடன் காதில் கடுக்கனுடன் இருந்த நடிகர் அஜித், இந்த புகைப்படத்தில் தாடி இல்லாமல் கிளீன் ஷேவ் செய்து நவநாகரீக தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த புகைப்படத்தை ஹேர் ஸ்டைலிஸ்ட் தேவ் சக்திவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Also Read | ரஷ்யா செல்லும் அல்லு அர்ஜூன் & ராஷ்மிகா.. ஏன்? அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!