COBRA M Logo Top
www.garudavega.com

TVS 50ல் இமயமலை சென்ற ரசிகர்.. அஜித்தின் நண்பரிடம் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய AK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

Ajith Kumar AK Meet His Tamilnadu fan in Ladakh

Also Read | ட்ரிம் செய்யப்பட்ட "கோப்ரா" படத்தின் நீளம் .. இப்போ DURATION எவ்வளவு? வெளியான தகவல்

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்தது.

ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Ajith Kumar AK Meet His Tamilnadu fan in Ladakh

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Ajith Kumar AK Meet His Tamilnadu fan in Ladakh

இந்த புகைப்படங்களை அஜித்தின் நண்பரும் சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவில்,  திருத்துறைப்பூண்டியை சார்ந்த பாலா எனும் ஒரு ரசிகர், "அண்ணா இப்போ நான் லடாக்ல தான் இருக்கேன். டிவிஎஸ் 50 வண்டில வந்தேன். அஜித் அண்ணாவை பார்க்க முடியுமா?" என கோரிக்கை வைத்தார்.

Ajith Kumar AK Meet His Tamilnadu fan in Ladakh

இந்த கமெண்டை பார்த்த சுப்ரஜ் வெங்கட்,  நடிகர் அஜித்தை ரசிகர் பாலா சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அஜித்துடன் பாலா எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.‌

Ajith Kumar AK Meet His Tamilnadu fan in Ladakh

பாலா, திருத்துறைப்பூண்டி முதல் லடாக் வரை டிவிஎஸ் 50 வண்டியில் பைக் ரைடு செய்து வருகிறார்.  இந்த வண்டிக்கு 'பிச்சுமணி' என பெயரும் இட்டுள்ளார்.

Also Read | சிம்பு - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'பத்து தல'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? அடடே

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Meet His Tamilnadu fan in Ladakh

People looking for online information on Ajith fans, Ajith Kumar, Ajith Kumar AK Meet His Fans, Ladakh will find this news story useful.