தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.
Also Read | குழந்தைகளுடன் சென்று பிரபல நடிகையை சந்தித்த விக்கி & நயன்! வைரல் போட்டோ
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.
சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார், தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் ஒரு மோட்டிவேஷன் அறிக்கையை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "உங்களை சிறப்பாக செய்யத் தூண்டும் நபர்களை உங்களை சுற்றி வைத்து கொள்ளுங்கள். நாடகமோ நெகட்டிவிட்டியோ இதில் இல்லை. உயர்ந்த இலக்குகள் உயர்ந்த உத்வேகம் மட்டும் இருக்க வேண்டும். சிறந்த நேரமும், பாசிட்டிவ் எனர்ஜியும் வேண்டும். பொறாமையோ வெறுப்போ இல்லை. ஒருவருக்கு ஒருவர் தங்களின் சிறந்த விஷயத்தை வெளியே கொண்டு வருவது தான் முக்கியம். வாழு.. வாழ விடு! அளவு கடந்த அன்புகள் அஜித்குமார்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிக்கை அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022
Also Read | "ஆனா சர்ப்ரைஸ்னு ஒன்னு பண்ண பாரு".. புகழ் பிறந்தநாளுக்கு பென்ஸி கொடுத்த கிஃப்ட்!