நடிகர் அஜித் நடிக்கும் புதிய படமான AK61 படத்தின் அடுத்த அப்டேட்டை நடிகை மஞ்சு வாரியர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Also Read | Soundarya Rajinikanth : மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்.!. சௌந்தர்யாவுக்கு பிறந்த 2-வது குழந்தை.. 😍
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தில் இணைந்துள்ளனர்.
AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.
AK61 படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் துவங்கியது.
இந்த சென்னை படப்பிடிப்பு காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
இந்த சென்னை படப்பிடிப்பில் நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொண்டார். இந்த சென்னை படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்கும் என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள தொலைக்காட்சி சேனலான Flowers டிவியின் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மஞ்சு வாரியர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்.
தற்போது நடிகை மஞ்சு வாரியர், நடிகர் அஜித் குழுவினருடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
Also Read | Jailer : தலைமுறையை தாண்டிய தலைவர் fan.. ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் வைரலாகும் சிறுமி.!