போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், நடிகர் அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
வலிமையின் சாதனைகள்
NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை படத்தின் படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் இரண்டு சிங்கிள் பாடலையும், THEME MUSIC- ஐயும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளனர். மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வலிமை படக்குழு
இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அஜித் ரசிகர்களின் நெகிழவைக்கும் செயல்
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் வலிமை படம் வெற்றி பெற புதுச்சேரி அஜித் ரசிகர்கள் புதுச்சேரி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள 100 குழந்தைகளுக்கு மதிய உணவாக பிரியாணி கொடுத்தனர். இச்செயல் சமூகவலைதளத்திலும், சமூகத்திலும் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.