www.garudavega.com

'துணிவு 'லுக்கில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்.. மனைவி ஷாலினியுடன் அஜித்குமார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் குடும்பத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Ajith Family Diwali Celebration Photos went viral

Also Read | Bigg boss 6 tamil : மயங்கி விழுந்த ஆயிஷா.. சண்டையை மறந்து தூக்கிக் கொண்டு ஓடிய அசீம்.! பிக்பாஸில் பரபரப்பு

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது 'துணிவு' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் தற்போதைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

Ajith Family Diwali Celebration Photos went viral

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Ajith Family Diwali Celebration Photos went viral

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை  நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். மனைவி ஷாலினி, மைத்துனர் ரிச்சர்டு, நடிகை ஷாம்லி ஆகியோர் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாம்லி வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய தயாரிப்பாளர்! இவரா?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Family Diwali Celebration Photos went viral

People looking for online information on Ajith Family, Ajith Family Diwali Celebration, Ajith Family Diwali Celebration Photos, Ajith Kumar, AK, Diwali Celebration will find this news story useful.