அண்மைக் காலமாகவே அஜித் ரசிகர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர், அஜித்தின் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் தொடர்பான அப்டேட்களை கேட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் வீரர் மொய்தீன் அலியிடமும், அவரை தொடர்ந்து சென்னை வந்த பிரதமர் மோடியிடமும் வலிமை படம் தொடர்பான அப்டேட்டுகளை கேட்டு சிலர் குரல் எழுப்பிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் காணமுடிந்தது.
இதனிடையே அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் முதல் பார்வை மிக விரைவில் வெளியிடப்படும் என இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக ஒரு சண்டைக்காட்சியை தவிர அனைத்து போர்ஷன்களும் படமாக்கப்பட்டு விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் அஜீத் தமது தரப்பில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாகவே என் ரசிகர்கள் என்கிற பெயரில் நான் நடித்திருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வறுத்தமுற செய்கிறது.
— Suresh Chandra (@SureshChandraa) February 15, 2021
முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம்மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
ALSO READ: தளபதி 'விஜய்' நடிக்கும் அடுத்த 2 படங்களின் இயக்குநர்கள் இவர்களா?.