தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித் குமார் தற்போது ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்தில் கிரிஷ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
துணிவு படம் நேற்று முன்தினம் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் அஜித் தற்போது ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தை தனது நண்பர்களுடன் சந்தித்த ரசிகர் ஒருவர், தனது டிவிட்டர் பக்கத்தில் சந்திப்பு தருணங்களை ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், "தல❤️😭 நாங்கள் 6 பேரும் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள், முதல் படத்தில் உள்ள மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 2வது படத்தில் உள்ள மூன்று பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். நேற்று மாலை 4 மணியளவில் அவர்கள் போன் செய்து "டேய் மச்சா கிளாஸ்கோவில் தல டா நீங்கள் வேகமாக வந்தால் அவரைச் சந்திக்கலாம்".என கூற உடனே அறையிலிருந்து 1கிமீ தூரமுள்ள அந்த இடத்திற்கு நாங்கள் வேகமாக ஓடினோம்.
நாங்கள் சென்ற போது தல அங்கு இல்லை. எனவே அவரை 15 நிமிடம் தேடினோம், அவர் கோஸ்டா காபி கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தோம். 5 நிமிடம் எங்களை அவர் பார்க்கவில்லை, பின்னர் அவர் எங்களை பார்த்தார். அவர் தலையை ஆட்டி எங்களை அழைத்தார். நான் அவரிடம் சென்று "நல்லா இருக்கிங்களா? தல" என்று கேட்டேன். அவர் "நல்லா இருக்கேன் பா.. நீங்க நல்லா இருக்கீங்களா? எந்த ஊரு இங்க என்ன பண்றிங்க?" என்றார். நான், "நல்லா இருக்கேன் தல. நான் தஞ்சாவூர்" என்றேன். அவர், "வெளியே புகைப்படம் எடுப்போம்" என்றார்.
நாங்கள் வெளியில் சென்று அவருக்காக காத்திருந்தோம் அவர் கையை கழுவிக்கொண்டு எங்களிடம் வந்தார். அவரு மேனேஜர் 1 போட்டோ தான் எடுத்தாரு. தல அதுக்கு நிறையா எடுங்கனு சொன்னாரு. நான் அவர்ட்ட நம்ம ஊருலாம் விட்டு இவளோ தூரம் தள்ளி உங்கள பாக்குற சான்ஸ் கிடச்சிருக்கு சோன்னேன். அதுக்கு ஒரு சிரிப்பு சிரிச்சாரு❤️. கடைசியா போட்டோ எடுத்துட்டு அப்டேட் இருக்கா தலனு கேட்டேன். I need Break -னு சொன்னாரு.
துணிவு நல்லா இருந்திச்சு தல! க்ளைமாக்ஸ் அந்த மாஸ்க் போட்டு நடந்து வர்றது செம மாஸ்னு சொன்னேன். அதுக்கு அவரு நல்லா இருந்திச்சா தேங்க்ஸ்பா சொன்னாரு. லாஸ்ட்ல போறப்ப ஹேண்ட்ஷேக் பண்ணி நல்லா படிங்க பெஸ்ட் ஆஃப் லக்னு சொல்லிட்டு தம்ஸ் அப் பண்ணிட்டு போனார். பெரிய செலிப்ரட்டினு பந்தா பண்ணல 5 நிமிஷம் எங்களோட செம ஜாலி-ஆ பேசுனாரு. இதலாம் கனவு மாரி இருக்கு😭😭😭 .நேருல பாக்க அவளோ அழகா இருந்தாரு.." என அந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.
Thala❤️😭 We 6 guys are from same House, in first pic three from tamil nadu 2nd pic three from Andhra Yesterday evening around 4pm they called and said Deai macha thala in glasgow da we took photo with him if you come fast u can meet him ra.From room to that location it arounds(1 pic.twitter.com/MP1uhj8ZdK
— Suriya Cristiano Kohli (@Virat18Suriya23) February 9, 2023