கடைசியாக வலிமை படத்தில் நடித்திருந்த நடிகர் அஜித்குமார், அடுத்ததாக மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத "AK61" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு, நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் கூட்டணி, மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் ஷூட்டிங் தான் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
AK61 படத்தின் பூஜை, கடந்த ஏப்ரல் மாதம், 11 ஆம் தேதி அன்று ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் வைத்து நடைபெற்றது.
இந்த படத்தில், மலையாள நடிகை மஞ்சுவாரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகர் ஜான் கொக்கனும், மற்றொரு நடிகர் வீராவும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இது தவிர, பிரபல நடிகர் சமுத்திரகனியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாமல், AK61 திரைப்படத்தின் BTS புகைப்படங்கள், அவ்வப்போது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகியும் வந்தன.
மேலும், AK61 திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதற்கு முன்பு அஜித் குமார் - ஹெச். வினோத் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் நிரவ் ஷா தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக அவர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்நிலையில், AK61 திரைப்படம் குறித்து அசத்தலான தகவல் ஒன்று, தற்போது வெளி வந்துள்ளது. முன்னதாக AK61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது. அதே போல, AK61 படத்தின் BTS புகைப்படங்கள் கூட இணையத்தில் அதிகம் வலம் வந்தது. இதற்கு மத்தியில், நடிகர் அஜித்குமார் லண்டனில் இருந்த புகைப்படங்களும் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இதனிடையே, AK61 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, தற்போது ஆரம்பமாகி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வட சென்னையின் காசிமேடு பகுதியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், ஹெச். வினோத் மற்றும் நிரவ் ஷா இருக்கும் புகைப்படமும் இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.