www.garudavega.com

LAL SALAAM ஷூட்டிங் நடுவே வெறித்தனமான உடற்பயிற்சி.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த VIDEO & PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களையும், தமது உடற்பயிற்சி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth Workout Session Photos Lal Salaam Movie BTS

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் படத்தினை  இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

 

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 10 நாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். மேலும் லால் சலாம் படத்தின் திருவிழா காட்சிகளை படமாக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth Workout Session Photos Lal Salaam Movie BTS

People looking for online information on Aishwarya Rajinikanth will find this news story useful.