ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளார்.
9 ஆண்டு இடைவெளி…
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தனுஷை மணந்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சமீபத்தில் அவர்கள் திருமன வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தது பரபரபாக பேசப்பட்டது. இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வயா மீண்டும் சினிமா பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து அவர் பல மொழிகளில் இயக்கிய பயணி (முசாஃபிர்) என்ற ஆல்பம் கவனத்தைப் பெற்றது. அதையடுத்து அவர் 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது ‘ஓ சாத்தி லால்’ என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார்.
பயணி ஆல்பம்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நான்கு மொழிகளில் முசாஃபிர் (தமிழில் பயணி) என்ற வீடியோ ஆல்பம் உருவானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பாடலை ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டது போல மலையாள வெர்ஷனை மோகன்லால் மற்றும் தெலுங்கு வெர்ஷனை அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர், இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இதனால் கூடுதல் கவனம் பெற்றது.
பாலிவுட் ENTRY…
பயணி ஆல்பத்தின் வரவேற்புக்குப் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘ ஓ சாத்தி சால்’ என்ற படத்தின் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கத்துக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் காதல் கதை என்று அந்த படத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது அவர் ஈடுபட்டு வருகிறார்.
Work mode best mode….
இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் தனது அடுத்த படத்துக்கான திரைக்கதை திருத்தும் பணிகளை அவர் தொடங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு என்பவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர் “workmode is the best mode thursdayvibes”எனக் கூறியுள்ளார். சமீபத்தில் இளையராஜா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியவர்களை அவர் சந்தித்தது பல ஊகங்களை எழுப்பியது. இந்நிலையில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/