ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளையராஜாவை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
விவாகரத்து முடிவு…
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தனுஷை மணந்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சமீபத்தில் அவர்கள் திருமன வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தது பரபரபாக பேசப்பட்டது. இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வயா மீண்டும் சினிமா பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து அவர் பல மொழிகளில் இயக்கிய பயணி (முசாஃபிர்) என்ற ஆல்பம் கவனத்தைப் பெற்றது.
பாலிவுட் அறிமுகம்…
பயணி ஆல்பத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இதை அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். ’ஓ சாத்தி சால்’ என்ற படத்தின் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கத்துக்கு திரும்பியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் காதல் கதை என்று அந்த படத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதற்கிடையில் அவர் நடிகர் ராகவா லாரன்ஸையும் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதனால் ஐஸ்வர்யா இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது.
இளையராஜாவோடு சந்திப்பு…
இந்நிலையில் தற்போது அவர் இசைஞானி இளையராஜாவோடு இருக்கும் புகைப்படங்களை தற்போது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜா ஆர்மோனியத்தில் வாசிப்பது போலவும் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த அதை மகிழ்ச்சியோடு கேட்பது போலவும் உள்ளது. மேலும் அந்த புகைப்படங்களோடு ”என்னுடைய திங்கள் கிழமை நண்பகல் இதைவிட மேஜிக்கலாகவும் ம்யூசிக்கலாகவும் இருக்க முடியாது. இளையராஜா அங்கிளோடு நேரத்தை செலவிடுவது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. Work mode on” எனக் கூறியுள்ளார். இதனால் இருவரும் இணைந்து ஏதேனும் ஒரு படத்தில் பணிபுரிய போகிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்களிக்கு எழுந்துள்ளது.