Reliable Software
www.garudavega.com

VIDEO: ஐஸ்வர்யா ராஜேஷா இது? LOCKDOWN-ல் வெறித்தனமான BOXING ..வேற லெவல் எனர்ஜி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று பல படங்களில் நடித்து வருபவர்.

Aishwarya Rajesh mass boxing Video during Lockdown

என்னதான் ஹீரோக்களுடன் இணைந்து திரைப்படங்கள் நடித்தாலும் தனக்கென்று தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அண்மையில் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இதேபோல் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா திரைப்படமும் அவருடைய கரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் தம்முடைய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தம்முடைய அப்டேட்களை தெரிவித்து வருபவர்.

Aishwarya Rajesh mass boxing Video during Lockdown

இந்த நிலையில் இந்த கொரோனா காலத்தில் பலரும் மனதளவில் முடக்கத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த சோர்வை எல்லாம் போக்கும் வகையில் வெறித்தனமான பாக்ஸிங் வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டிருக்கிறார். மிகவும் திறமையாகவும் அசாத்தியமாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிடுகிடுவென பாக்சிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பாக்ஸிங் வீடியோவில் ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்த பலரும், “என்ன ஒரு எனர்ஜி ஐஸ்வர்யா ராஜேஷ்!” என்று கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பாக்ஸிங் செய்யக்கூடிய வீடியோவானது நேர்மறையான எண்ணங்களை விதைப்பதாகவும் இதுபோன்ற ஒரு சூழல் ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுப்பதாகவும் பலரும் கருதுகின்றனர்.

Aishwarya Rajesh mass boxing Video during Lockdown

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன திரைப்படமான கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சராசரி இந்திய மனநிலை ஆண்கள் எப்படி இந்திய பெண்களை நடத்துகிறார்கள் என்பதை விமர்சிக்கும்படியான கருத்துக்கள் கதையுடன் இணைந்து இடம்பெறுவதாக தெரிகின்றன. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கணவராக பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தர் நடிக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: "தல அஜித் நடிக்கும் வலிமை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸா?".. ட்ரெண்டிங் தகவல். உண்மை என்ன?

VIDEO: ஐஸ்வர்யா ராஜேஷா இது? LOCKDOWN-ல் வெறித்தனமான BOXING ..வேற லெவல் எனர்ஜி!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh mass boxing Video during Lockdown

People looking for online information on Aishwarya Rajesh will find this news story useful.