பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
Also Read | ஷிவினை வச்சு ADK ஸ்பாட்ல பாடிய பாடல்.. டக்குன்னு ஒன்னு கூடிய ஹவுஸ்மேட்ஸ்.. இன்றைய பிக்பாசில்..!
இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது. தற்போது விக்ரமனின் பெற்றோர் மற்றும் கதிரவனின் தாய் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், போட்டியாளர் ஒருவர் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
முன்னதாக அனைவர் முன்னிலையில் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், "இந்த சீசன் வந்து சூப்பர் ஹிட்டு. இதுக்கு அப்புறம் இன்னும் கடினமா நீங்க விளையாடனும்ன்னு நான் நெனைக்கிறேன். என்ன சண்டை போட்டாலும் ஒரு ரூல் வெச்சுக்கோங்க. என்ன சண்டை நடந்தாலும் வீட்டுல ஒண்ணா உக்காந்து சாப்பிடுங்க" என நிறைய விஷயங்களை அறிவுறுத்தவும் செய்கிறார்.
இதற்கிடையில், ஷிவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போவார் என அசிம் குறிப்பிடுவதாக தெரிகிறது. அப்போது பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், "ஷிவின் நல்லா தான் விளையாடுறாங்க. அவங்க வெளில போக மாட்டாங்க. நான் உங்க Interview பார்த்து இருக்கேன்" என்றும் தெரிவிக்கிறார். தொடர்ந்து, Freeze டாஸ்க்கில் வரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் ஷிவினை வாழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல, மணிகண்டாவின் தாய், தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், மனைவி சோஃபியா என குடும்பத்தினர் ஒன்றாக ஹவுஸ் மேட்ஸ் அனைவருடனும் இணைந்து நடனமாடவும் செய்கின்றனர். Freeze டாஸ்க் மிகவும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதால் அனைவரும் அதனை உற்சாகத்துடனும் கண்டு களித்து வருகின்றனர்.
Also Read | கதிரவனுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்த Guest.. மனுஷன் நம்பவே இல்லையே.. நெகிழ்ச்சி தருணம்