கேன்ஸ் 2022: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.
Also Read | இது தான் 'விக்ரம்' பட சூர்யா கெட்டப்பா? வெளிவந்த BTS போட்டோ! சம்பவம் இருக்கு
செவ்வாயன்று, கேன்ஸ் நடுவர் மன்ற உறுப்பினர் நடிகை தீபிகா படுகோன் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். இம்மதிப்புமிக்க நிகழ்வில் நடிகைகள் தமன்னா பாட்டியா, ஊர்வசி ரவுடேலா. நடிகை பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் சென்ற ஐஸ்வர்யா ராய் பச்சனும் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.
கேன்ஸ் பட விழாவுக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்தியக் குழுவில் நடிகை தமன்னாவும் இடம்பெற்றுள்ளார். இப்பிரதிநிதிகள் குழுவில் ஏஆர் ரஹ்மான், பூஜா ஹெக்டே, நவாசுதீன் சித்திக், ஆர். மாதவன் மற்றும் சேகர் கபூர் உள்ளிட்டோர் உள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் பச்சன் பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். நந்தினி மற்றும் அவரது தாயார் மந்தாகினி தேவி ஆகிய இரு வேடங்களில் ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டிங் இந்திய பெவிலியன் பிரிவில் ஆறு படங்கள் இடம்பெற்றுள்ளன, ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் (இந்தி, ஆங்கிலம், தமிழ்), கோதாவரி (மராத்தி), ஆல்பா பீட்டா காமா (இந்தி), பூம்பா ரைடு (மிஷிங்), துயின் (மைதிலி) ) மற்றும் நிரயே ததகலுல்லா மரம் (மலையாளம்) ஆகிய 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் ராக்கெட்ரி திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8