Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top
www.garudavega.com

‘நந்தினி’ ஐஸ்வர்யா ராயும், ‘குந்தவை’ த்ரிஷாவும் .. PS1 செட்டில் இருந்து வைரல் ஆகும் செல்ஃபி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

Aishwarya Rai and Trisha Viral selfie from PS1 set

லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

முன்னதாக பொன்னியின் செல்வன் இசைவிழாவில் பேசிய நடிகை த்ரிஷா, “இப்போது இந்தியாவில் பார்த்தால் பான் இந்தியா சினிமா என்பது அதிகமாகின்றது. அதிலும் தென்னிந்திய சினிமாக்களை அனைவரும் அதிகமாக ரசித்து பார்க்கிறார்கள். சொல்லப்போனால் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்களை அவர்களுக்கு நாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். லவ் ஸ்டோரி, டிராமா, ஆக்சன் உள்ளிட்ட பல.... பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியா முழுவதும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இந்தியாவின் மிக நேர்த்தியான ஒரு திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் படுகிறோம்!” என்று கூறியிருந்தார்.

இதேபோல், திரையில் குந்தவை (த்ரிஷா) மற்றும் நந்தினியின் (ஐஸ்வர்யா ராய்) Face Off குறித்தும் த்ரிஷா பல வேளைகளில் சிலாகித்து பேசிவந்தார். இந்நிலையில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தத்தம் கேரக்டர் லுக்கில் எடுத்துக்கொண்ட ஒற்றை செல்ஃபி இணையத்தில் படுவைரலாகி வருகிறது.  “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rai and Trisha Viral selfie from PS1 set

People looking for online information on Aishwarya rai, Aishwarya Rai Bachchan, AR Rahman, Lyca Productions, Mani Ratnam, Ponniyin Selvan part 1, Trisha Krishnan will find this news story useful.