மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. மாயநதி, வரதன் உள்ளிட்ட மலையாள திரைப்படங்கள் ஐஸ்வர்யா லட்சுமியை பிரபலமாக்கி இருந்த நிலையில், விஷால் நடிப்பில் உருவாகி இருந்த 'ஆக்ஷன்' படம் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆகியிருந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம், கார்கி, பொன்னியின் செல்வன் முதல் பாகம், கட்டாகுஸ்தி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்கள் இன்னும் அதிகம் ஐஸ்வர்யாவுக்கு புகழைத் தேடித் தந்தது.
அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஏற்று நடித்த "பூங்குழலி" கதாபாத்திரத்திற்கு பிறகு அவரை பலரும் பூங்குழலி என்றே குறிப்பிட்டு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் அவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி' படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பு பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில், பிரபல இளம் நடிகரான அர்ஜுன் தாஸுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த கைதி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் மிரள வைத்திருந்தார் அர்ஜுன் தாஸ். வில்லத்தனமான அவரது குரலும் அதிகம் கவனம் பெற்றிருந்தது. இதற்கடுத்து அந்தகாரம், விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்த அர்ஜுன் தாஸ், அநீதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் அடுத்து நடித்து வருகிறார்.
இதனிடையே ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் சமீபத்தில் சந்தித்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் இருவரும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்து நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அந்த சமயத்தில் இந்த புகைப்படம் எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Also Read | "வாரிசு தந்த வரவேற்பு 😍"... விஜய்யை நேரில் சந்தித்த இயக்குனர் & தயாரிப்பாளர்.. வைரல் Pic!!