பொன்னியின் செல்வன் படத்தின் பூங்குழலி கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் BTS வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின்
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.
இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி சமுத்திரக்குமாரி கதாபாத்திரத்தின் கேரக்டர் லுக் BTS வீடியோவை லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. விதவிதமான தோற்றத்தில் ஐஸ்வர்யா லெஷ்மி இந்த வீடியோவில் தோன்றியுள்ளார்.
A ray of sunshine in a sea of darkness!
Here is the most-awaited BTS of #Poonguzhali #AishwaryaLekshmi
In theatres from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!
ICYMI, watch #PS2Trailer
▶️ https://t.co/PvNu4lqt61 #CholasAreBack #PS2 #PonniyinSelvan2 pic.twitter.com/oLjHYVOBg7
— Lyca Productions (@LycaProductions) April 5, 2023