www.garudavega.com

தயாரிப்பாளரான இளம் நடிகை.. மேடையில உடைந்து அழுகை.! ஓடிவந்த சாய் பல்லவி.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. தற்போது இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது சாய் பல்லவி நடித்துள்ள 'கார்கி' திரைப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

Aishwarya Lekshmi cried sai pallavi gargi press meet

இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட் மற்றும் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன், சக்தி பிலிம்ஸ் சக்தி வேலன், 2டி என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, நடிகை சாய் பல்லவியின் பங்களிப்பு குறித்து பேசும் முன்,  இப்படம் தாமதம் ஆனதற்கான காரணத்தை கூறவந்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே உடைந்து அழுதுவிட்டார். அவர் கண்கலங்கியதுமே அனைவரும் உருக்கமாகிவிட்டனர்.

அப்போது மேடையில் இருந்த சாய் பல்லவி திடீரென எழுந்து வந்து, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மிக்கு அருகில் வந்து அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். மேலும் அப்போது பேசிய சாய் பல்லவி ஐஸ்வர்யாவின் பயணம் குறித்து விளக்கி அவர் எமோஷனல் ஆவதற்கு அதுவே காரணம் என விளக்கினார்.

Aishwarya Lekshmi cried sai pallavi gargi press meet

பின்னர் சகஜமாகிவிட்டு, இப்படம் குறித்து ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பேசும்போது, சாய் பல்லவியை பாராட்டினார்.  குறிப்பாக 'கார்கி' படத்தில் சாய் பல்லவியை விட வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று குறிப்பிட்டதுடன், சுமார் 3 வருடங்கள் கார்கி  படத்தில் பணியாற்றியதாகவும், என்னென்ன மேடு பள்ளங்கள் என அனைத்தும் அவர் அறிவார் என்றும் கூறினார்.

Aishwarya Lekshmi cried sai pallavi gargi press meet

இப்படம் குறித்து பேசிய சாய் பல்லவி, இப்படம் குறித்து உழைத்த அனைவருக்குமே நன்றி தெரிவித்ததுடன், இந்த படத்தை வெளியிட முன்வந்த சூர்யா - ஜோதிகா இருவருக்கும் நன்றி தெரிவித்து பாராட்டியிருந்தார்.

மற்ற செய்திகள்

Aishwarya Lekshmi cried sai pallavi gargi press meet

People looking for online information on Aishwarya Lekshmi cried sai pallavi gargi press meet, Aishwarya Lekshmi sai pallavi gargi will find this news story useful.